ETV Bharat / state

"மகளிர் உரிமைத்தொகை வழங்கிவிட்டு அரசு படாதபாடு படுகிறது" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை பேச்சு - Minister KKSSR Ramachandran - MINISTER KKSSR RAMACHANDRAN

KKSSR Ramachandran: ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மகளிர் உரிமைத் தொகையை வழங்கிவிட்டு அரசு படாதபாடு படுவதாகவும், ஆயிரம் ரூபாய் வாங்காத பெண்களிடம் இருந்து தப்பிப்பது பெரும்பாடாக உள்ளதாகவும் கூறினார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 9:59 AM IST

தென்காசி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகை புரிந்து சங்கரநாராயணன் கோயில் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டு அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 10 வட்டாரங்கள் மற்றும் 374 பள்ளிகளில் பணிபுரியும் 977 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ரூபாய் 124.37 இலட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், “நீங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் சொல்லமலே நாங்கள் செய்வோம். தமிழக அரசிடம் பணம் இல்லை. மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு நாங்கள் படாத பாடு படுகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட பெண்கள் வாயை திறப்பதில்லை.

வாங்காத ஒரு சில பெண்கள் எங்களை படுத்தும் பாட்டில் தப்பித்து ஓடி வருவது பெரும்படாக உள்ளது. கிராமப்புற பெண்கள் அட்வான்ஸாக உள்ளனர். தங்களுக்கு வழங்கப்படாத அரியர் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுகின்றனர்” என பேசினார். இவரின் பேச்சு தற்போது பேசு பொருளாகி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “அரசு கேபிள் நிறுவனம் நலிவடைந்து உள்ளது” - மாஜி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்! - TN arasu cable TV

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.