திருவண்ணாமலை: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் மீது அமைச்சரின் மகன் சென்ற கார் நேருக்கு நேர் மோதி உள்ளது.
இதில், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த அவரது கார் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம், எதிரே மோதிய காரில் வந்தவர்களும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும், அமைச்சரின் மகன் கார் மோதி விபத்துக்குள்ளான காட்சி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இதையும் படிங்க: நெல்லை பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன தந்தூரி சிக்கன்.. அதிர்ந்து போன வாடிக்கையாளர்!