ETV Bharat / state

அவிநாசி மேம்பாலப் பணிகள் எப்போது முடியும்? - அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த அப்டேட்! - AVINASHI FLYOVER WORKS

அவிநாசி மேம்பாலப் பணிகள் வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 9:18 PM IST

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கடந்த மூன்று ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.997 கோடி மதிப்பீட்டில் 664 கிலோ மீட்டர் அளவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டிற்குள் 142 கிலோ மீட்டர் சாலைகள், ரூ.332 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட 32 கிலோ மீட்டரில், முதல் கட்டமாக 12 கிலோமீட்டர் சாலை அமைப்பதற்கு தமிழக அரசால் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று கட்டமாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ரூ.1,291 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அவிநாசி மேம்பாலப் பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

இதையும் படிங்க : வாயு கசிவு ஏற்பட்ட பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு...அறிக்கைக்குப் பின்னரே பள்ளி திறப்பு!

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காத விதமாக, சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்று மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலம் எடுக்கும் பணிகள் தாமதமாகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழகம் முழுவதும் ஐந்து சிறப்பு டிஆர்ஓ-க்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து உதகமண்டலத்திற்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக, ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொறியியல் குழுவினர்களுடன் பேசப்படும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.