ETV Bharat / state

மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடையா? ஐகோர்ட் உத்தரவு!

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 2:35 PM IST

சென்னை: பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடுவதை முறைப்படுத்தக் கோரி மங்கையர்கரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதில், "மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட, போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை நம்ப வைக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், போலி மருத்துவர்கள், போலி மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் வகையிலான விளம்பரங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விவரங்கள்; பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது? என தெரிவித்தனர்.

மேலும், விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க முடியும். மனுதாரர் இது சம்பந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டங்கள் இருப்பதால், விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.