சென்னை: கடலூரைச் சேர்ந்த செல்வம், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வம் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷேஷசாயி, அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின் அளித்த தீர்ப்பில், காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண், மனுதாரருடன் உறவில் இருந்துள்ளார். அதனால் முதல் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ ஆவணங்களின் படி அது உறுதியும் செய்யப்படுகிறது.
மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ இந்திய அரசியலமைப்பின் படி அனைத்து உரிமைகளும் உள்ளது. அதனால், ஆவணங்களை ஆராயாமல் கடலூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : சாதிப்பெயரைக் குறிப்பிட்டு பேச்சு.. கும்பகோணம் அரசினர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - Students Protest In Kumbakonam