ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு விபரங்கள் தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

Madras High Court: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மற்றும் ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டுகளின் வரவு, செலவு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 12:52 PM IST

சென்னை: மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கட்டுமானங்கள் மேற்கொள்வதை தடுக்கவும், கணக்குகளை சமர்ப்பிக்கவும், பொது தீட்சிதர் குழுவுக்கு உத்தரவிடக் கோரி இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வின் முன்பாக நேற்று (பிப்.21) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, அறநிலையத் துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, ''சட்ட விரோதமாக கட்டுமானம் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மீறி தீட்சதர்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்'' என்று கூறி அதற்கான புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தார்.

மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் 2023-24 ஆண்டுக்கான வருமானவரி தாக்கலில், ரூ.2 லட்சம் வருவாய் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் ரூ.6 லட்சம் வரை வருவாய் ஈட்டப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், “சட்டவிரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை. இந்து சமய அறிநிலையத் துறையால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, கோயில் நிர்வாகத்தில் மறைமுகமாக அறநிலையத் துறை தலையிட முயற்சிக்கிறது. தனிப்பட்ட கணக்கு தணிக்கையாளர்கள் கொண்டு வரவு, செலவு தணிக்கை செய்யப்படுகிறது. ஆருத்ரா தரிசன வரவு செலவுகளை கவனிக்க தனி அறக்கட்டளை உள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மற்றும் ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த மூன்றாண்டு வரவு, செலவு மற்றும் வருமான வரி தாக்கல் போன்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை நாளை (பிப்.23) தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் படவில்லை என்பதை, காணொலி காட்சி வாயிலாக நிரூபிக்க வேண்டும் என்று பொது தீட்சதர்கள் குழுவுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு..! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.