ETV Bharat / state

ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கு; கூகுள் நிறுவனத்துக்கு ஐகோர்ட் 'செக்'! - porn advertisement issue - PORN ADVERTISEMENT ISSUE

Madras High Court: கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 6:42 PM IST

சென்னை: கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலப்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அபாயம் உள்ளது' என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கூகுள் நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சப்-இன்ஸ்பெக்டரால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை; ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு! - Compensation to victim kin

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.