சென்னை: சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோபாலபிள்ளை விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள தனது உறவினர் புஷ்பராஜ் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் புஷ்பராஜை தனிமை சிறையில் அடைத்ததோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசி உள்ளனர்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று( அக்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து, மனு குறித்து புழல் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-10-2024/22717082_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்