ETV Bharat / state

காதலர்கள் முத்தம் கொடுப்பதை பாலியல் குற்றமாக கருத முடியாது - நீதிமன்றம் தீர்ப்பு! - LOVERS SHARING KISS NOT OFFENCE

சட்டம் அனுமதிக்கின்ற வயதில் காதல் செய்கின்ற இருவர், விருப்பத்துடன் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காதலர்கள் - கோப்புப்படம்
காதலர்கள் - கோப்புப்படம் (Meta Llama 3.2)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 8:16 AM IST

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நவம்பர் 2022ஆம் ஆண்டு காதலன் தனியாகச் சந்திக்க வேண்டும் என காதலியை அழைத்துள்ளார். அதையடுத்து, நவம்பர் 13ஆம் தேதி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேசியதாகவும், அப்போது காதலன் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு, பெற்றோரிடம் தனது காதலை தெரிவித்த காதலி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வலியுறுத்தியுள்ளார். ஆனால், காதலன் திருமணம் செய்ய மறுத்ததுடன், தொடர்ந்து நேரில் சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால், தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை காதலித்து பாலியல் தொல்லை அளித்ததாக காதலி புகார் அளித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)

அந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாலியல் தொல்லை அளித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கு ஶ்ரீவைகுண்டம் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம், செல்போனை பறித்தவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு..!

இந்த நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி காதலன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வளர் இளம் பருவத்தினர் இருவர் காதல் வசப்பட்டு, அதன் வெளிப்பாடாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இயல்பானது.

மேலும், 20 வயதான காதலன் தனது 19 வயதான காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தருவது சட்டரீதியாகத் தவறில்லை. அதனால், சி.ஆர்.பி.சி 482-இன் படி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஶ்ரீவைகுண்டம் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.