சென்னை: மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் சில நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி விலங்குகளின் சொர்க்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது வருவாய்த் துறையினர் டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மேட்டூர் அணை பகுதியில் சிக்கி தவித்த நாய்கள் அனைத்தையும் வருவாய்த் துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ”கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்” - அரசுப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை! - National Handloom Day