சேலம்: காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை கடந்த 1934ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் 71வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இன்று காலை 9.15 மணிக்கு 100 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேட்டூர் அணையின் 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,18,009 கன அடியிலிருந்து 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 101.70 அடியாக உள்ளது. நீர் இருப்பு 67.06 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதே அளவு நீர்வரத்து நீடித்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்னும் சில தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 16ம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 நாட்களில் 57 அடி உயர்ந்து 100 அடியை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தருமபுரி - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை பணி: முன்னாள் எம்பிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் - Dharmapuri thoppur highway