ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயில் திருத்தேர் பவனி; திரளான பக்தர்கள் தரிசனம்! - chariot function at Melmalayanur

Melmalayanur Angala Parameswari Temple: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

Melmalayanur Angalamman Parameswari Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 7:34 PM IST

மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயில் திருத்தேர் பவனி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவான இன்று (மார்ச் 14) திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புகழ்பெற்ற மாசி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரகம், மயானக் கொள்ளை, ஆண் பூத வாகனம், பெண் பூத வாகனம், சிம்ம வாகன வீதி உலா, தீமிதி திருவிழா என்று நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஏழாம் நாளான இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்ட பின், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் வழக்கப்படி திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு, வடக்கு வாசலிலிருந்து திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. முக்கியமான வீதிகளில் திருத்தேர் வலம் வந்து, மீண்டும் வடக்கு வாயிலை வந்தடைந்தது.

இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரினை வடம் பிடித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த தேர்த் திருவிழாவில், இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

திருத்தேரின் சிறப்பு: “சிவனுக்கு பிரமஹத்தி தோஷம் பிடித்து விடும். அப்போது மேல்மலையனூர் மயானக் கொள்ளையில், அங்காளபரமேஸ்வரி சிவனுக்கு பிடித்திருந்த பிரமஹத்தி தோஷத்தை நீக்கியதால், உக்கிரமான அங்காளபரமேஸ்வரி அம்மனை சாந்தப்படுத்தவே தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் தேர் பாகங்களாக மாறி அம்மனை சாந்தப்படுத்தியதாக ஐதீகம் உண்டு.

அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் பச்சை பனைமரம், புளியமரம், காட்டுவாள் மரம் போன்றவற்றால் புதிதாக தேர் செய்யப்பட்டு திருவிழா நடைபெறுகிறது. இந்த தேரினை படைத்தேர் என்றும் அழைப்பர்”.

இதையும் படிங்க: மனைவி பற்றி சுவர்களில் தவறாக வாசகம்.. கணவர் கொலை - தஞ்சையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.