ETV Bharat / state

போலி பேராசியர்கள் விவகாரம்; எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கல்லூரிகளின் மருத்துவர் விவரங்கள் எப்போது? அமைச்சர் மா.சு பதில்! - MINISTER MA SUBRAMANIAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 7:11 PM IST

MINISTER MA SUBRAMANIAN: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரிகளின் இணைவு பெற்ற கல்லூரிகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலி ஆசிரியர்கள் தொடர்பான விவகாரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

MINISTER MA SUBRAMANIAN
MINISTER MA SUBRAMANIAN (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: உலக தாய்ப்பால் வாரம் 1992ஆம் ஆண்டு முதல், வருடந்ததாறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தாய்ப்பால் விழிப்புணவர்வை ஏற்படுத்தும் வகையில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது குறித்து உறுதிமாெழி ஏற்கும் நிகழ்ச்சியும், தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உறுதிமொழியை வாசிக்க சுகாதாரப் பணியாளர்கள் உறுதிமாெழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலக தாய்ப்பால் வாரம் வருடந்ததாறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தாய்ப்பால் நன்மை: தாய்ப்பால் இளஞ்சிசு இறப்பு விகிதத்தை 20 சதவீதம் தடுக்கிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை 13 சதவீதம் வரையில் தடுக்கிறது. வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பிற்கான வயாப்பினை 11 மடங்கு குறைக்கிறது. நிமோனியா மூலம் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்பினை 15 மடங்கு குறைக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தொற்றாதா நோய்களைத் தடுக்க உதவுகிறது. இளம் சிசுக்கள் மருத்துவமனையில் தங்கும் நேரத்தை குறைக்கிறது.

தமிழ்நாட்டில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 2016- 2017ன் படி பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டுதல் விகிதம் 54.7 ஆக இருந்தது. 2020-21ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 60.2 விகிதமாக உயர்ந்துள்ளது. முதல் 6 மாதத்தில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் 2016-17ம் ஆண்டில் 48.3 என இருந்தது. அது 2020-21 ஆண்டில் 55.1 என உயர்ந்துள்ளது. இதனை 100 சதவீதம் என உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைகள் சார்பில் தற்போது 11 தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தனியார் மருத்துவமனைகளும் இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சேவை மனப்பான்மையோடு இலவசமாக எந்த மருத்துவமனை இந்த தடுப்பூசிகளைச் செலுத்த முன் வருகிறதோ அந்த மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி விரைவில், 11 தடுப்பூசிகளும் இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கும் நடைமுறை தொடங்கப்படும்.

போலி ஆசிரியர்கள் விவகாரம்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று இயங்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்படாமல் இருந்தால் அதனை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பேருந்து நிலையங்களில் இருக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை உரிய வசதிகளுடன் பராமரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வயநாடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்கள் கிராமங்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்வது இதுபோன்ற பணிகளை செய்வதற்கு மருந்துகளுடன் ஏற்கனவே வாகனங்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “மேடம் கழிபறை இல்லை.. சரியான உணவு இல்லை..”- புதுக்கோட்டை ஆட்சியரிடம் புகார்! - direct petition to collector

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.