ETV Bharat / state

"மு.க.ஸ்டாலினுக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன்" - வைகோ பெருமித பேச்சு! - Vaiko

சிறுவயதில் என் நெஞ்சில் என்ன சுட்டதோ? அதே உணர்வோடு எனது கடைசி காலம் வரை திமுக கூட்டணியில் இருப்பேன் எனவும், கலைஞருக்கு மெய்க்காப்பாளனாக இருந்ததைப் போல மு.க.ஸ்டாலினுக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன் என்றும் திமுக பவள விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

திமுக பவள விழாவில் வைகோ
திமுக பவள விழாவில் வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 12:16 PM IST

காஞ்சிபுரம்: திமுக துவங்கி 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த பவள விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது விழா மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தமிழகத்தில் 40க்கு 40 வெற்றியைப் பெற்றுக்கொடுத்தீர்கள். மோடியும், அவருடைய கூட்டமும் நாட்டிற்கான நாச வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அண்ணா முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட போது, ஆளுநர் அழைப்பு விடுத்தார். அன்றைக்கு இருந்த ஆளுநர் நல்லவர். ஆனால், இன்றைக்கு இருக்கும் ஆளுநர் போல அல்ல அன்றைக்கு இருந்த ஆளுநர்.

பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் பெரியாரைப் பார்க்க திருச்சி சென்றார். புது மாப்பிள்ளை போல என்னைப் பார்க்க அண்ணா வந்தார். நான் தலைகுனிந்து புது பெண் போல மனமேடையில் அமர்ந்திருந்தேன் என பெரியார் தெரிவித்தார். பெரியாரின் கொள்கைகளைச் சட்ட மசோதாக்களாகவும், திட்டங்களாகவும் அண்ணா செயல்படுத்தினார். எங்கிருந்தாலும் பெரியார் என் நெஞ்சில் இருப்பார், பெரியார் நெஞ்சில் நான் இருப்பேன் என அண்ணா தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்" - திமுக பவள விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சிறுவயதில் என் நெஞ்சில் என்ன சுட்டதோ? அதே உணர்வோடு எனது கடைசிக் காலம் வரை திமுக கூட்டணியில் இருப்பேன். கலைஞருக்கு மெய்காப்பாளனாக இருந்ததை போல மு.க ஸ்டாலினுக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன். திமுக-வை அழிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற கொடுங்கோலன் வந்துள்ளான். கோயில்களை காட்டி, பக்திகளைக் காட்டி தன் பக்தர்களை இழுக்கப் பார்க்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி. அதனை முறியடிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார்.

மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார். இந்த முறை எங்கும் வெற்றி பெறவில்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தீர்கள்? 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எங்கே இருந்தது?. ஆபத்து வருகிறது என்று சொன்னால் தலையைக் கொடுப்போம். கடைசிக் காலத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் மு.க ஸ்டாலின் கரம் பற்றி வந்துள்ளேன். வெல்க திமுக" என முழங்கினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.