சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பேரணி இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், டிசி ராஜேந்திரன், சுப்பிரமணியன், கழககுமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஆரிய புரட்சி என்று குடியரசு இதழிலே தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். அயராமல் போராட்ட களத்தில் இருந்தவர் தந்தை பெரியார். இந்தி தினிப்பை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டவர். இவருடன் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் தாளமுத்துவும், நடராசனும்.
இதையடுத்து 1939ஆம் ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி தாளமுத்து மறைந்தார், மார்ச் 15ஆம் தேதி நடராசன் மறைந்தார். பின் 1994 ஜனவரி 25 இதே நாளில் நான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் இங்கு வந்த போது முள்ளும் சேறும், சகதியுமாக மோசமான நிலையில் இருந்தது. இந்த இடத்தை மண்டபம் கட்ட வேண்டும் என்று மதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் ஜீவன் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: "வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம்" - தமிழ்நாடு அரசு
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த இடத்தை சுத்தம் செய்து மணிமண்டம் கட்டி மொழிப்போர் தியாகிகளை பெருமைப்படுத்தி உள்ளார். திமுகவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வெளியேற்றப்பட்டேன். ஆனாலும், திராவிட இயக்கம் காக்க வேண்டும். உறுதுணையாக நிற்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டுக்கும் திராவிட கழகத்திற்கும் நற்பணியாற்ற உறுதுணையாக நிற்க வேண்டும் என நினைத்தேன்.
அந்த நாளிலிருந்து திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். திராவிட இயக்கம் விண்ணும், மண்ணும் இருக்கும் வரை ஓடும் நதியும் இருக்கும் வரை புகழ் பெற்று விழங்கும்” என்றார். இதையடுத்து, வேங்கை வயல் விவகாரம், சீமான் பெரியார் குறித்து பேசியதற்கு பல கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது எனக் கூறினார்.