ETV Bharat / state

திடீரென மெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை - சேலம் ரயில்.. பயணிகள் அதிர்ச்சி! - Mayiladuthurai to Salem Train issue - MAYILADUTHURAI TO SALEM TRAIN ISSUE

Passenger Rail change to Memu Rail: மயிலாடுதுறையிலிருந்து சேலம் செல்லக்கூடிய ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று முதல் குறைந்த பெட்டிகளுடன் மெமு ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை ரயில் நிலையம் புகைப்படம்
மயிலாடுதுறை ரயில் நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 3:18 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில் சேவை, கடந்த ஆண்டு சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. அதனைத் தொடர்ந்து, மறுமார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.

ரயில் பயணிகள் சங்கத்தினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அதிக அளவில் பயணித்து வருகின்றனர். தற்போது சேலம் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதில் இருந்து பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வந்தது. ஆகையால், 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து 16 பெட்டிகளாக இயக்க வேண்டும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவரும் ரயில்வே நிர்வாகத்திடம் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக, 12 பெட்டிகளுடன் இயங்கி வந்த ரயிலை 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர், திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று முதல் மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயில் மெமு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பயணிகள் செல்லக்கூடிய சேலம் ரயிலில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே அமரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டு பயணிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், ரயில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்படாததால் பயணிகள், மயிலாடுதுறை - சேலம் செல்லக்கூடிய ரயிலை அடையாளம் காண்பதில் சிரமப்படுகின்றனர். எனவே, ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் மயிலாடுதுறை முதல் சேலம் வரையிலான ரயிலை, ஐசிஎஃப் (ICF) வண்டியாக கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து இயக்க வேண்டுமென மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: நாளை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.