ETV Bharat / state

இருமுறை தோல்வி.. மூன்றாவதாக மருத்துவக் கனவை எட்டிய ஆக்கூர் நாயகி! - student Chandrodaya

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 9:04 PM IST

NEET Exam: மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியின் மகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் நீலகிரி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சந்திரோதயா‌
மாணவி சந்திரோதயா‌ (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: தமிழகத்தில் நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்ற நீண்ட விவாதம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வென்று தங்களது எட்டாக்கனியான மருத்துவக் கனவை எட்டிப் பிடித்துள்ளனர்.

மாணவி சந்திரோதயா மற்றும் அவரது பெற்றோர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், மயிலாடுதுறை அருகே ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சந்திரோதயா‌, 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து 3வது முறையாக தேர்ச்சி பெற்று, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சந்திரசேகர் - விஜயா தம்பதி. இவர்களது மகள் சந்திரோதயா. இவர் ஆக்கூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். தொடர்ந்து, 12ஆம் வகுப்பை திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார்.

நீட் தேர்வில் 2 முறை தோல்வி: 10ஆம் வகுப்பில் 476 மதிப்பெண்கள் மற்றும் 12ஆம் வகுப்பில் 538 மதிப்பெண்கள் பெற்று படித்த 2 பள்ளிகளிலும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து, கடந்த 2022-ல் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அதில் அவர் 107 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளார். தொடர்ந்து படித்து 2வது முறை எழுதிய தேர்வில் 254 மதிப்பெண்கள் பெற்று மேலும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி: இண்டு முறை தோல்வியடைந்துவிட்டோம் என மனதை தளரவிடாமல், பெற்றோர் அளித்த ஊக்கத்தினால் 3வது முறை நீட் தேர்வு எழுதி, 497 மதிப்பெண்கள் எடுத்து 7.5 சதவீதம் அரசு உள் ஒதுக்கீட்டில், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.

இது குறித்து மாணவி சந்திரோதயா‌ ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “சிறுவயது முதல் மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து, 3வது முறையில் வெற்றி பெற்றுள்ளேன். ஒருமுறை தோற்றுவிட்டால், அதை எண்ணி மனம் தளர விடாமல், தவறான முடிவுகள் எடுக்காமல் கடின உழைப்புடன் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

எனது குடும்பத்தினர் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். எனக்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இருதய நோய் நிபுணராகி, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். தற்போது நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்வியின் காரணமாக தவறான முடிவினை எவரும் எடுக்க வேண்டாம்.

எத்தனை முறை தோல்வி என்பது முக்கியமல்ல, நாம் எவ்வாறு, யாருக்காக படிக்கின்றோம் என்பது முக்கியம். எனவே, அதுபடி படித்து அனைவரும் வெற்றி பெற வேண்டும். மேலும், அரசு இட ஒதுக்கீட்டை 7.7 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கினால் ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை சந்திரசேகர் கூறுகையில், “எனது மகளின் பள்ளி ஆசிரியர்கள் கூறியதன் படி, அவரை நான் படிக்க வைக்க ஆசைப்பட்டேன். போதிய வசதி இல்லாத காரணத்தினால், எனது மக்கள் வீட்டில் இருந்து நீட் தேர்விற்கு தயாரானார். 2 முறை தோல்வியைக் கண்டு 3வது முறையாக தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது அவருக்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது மகளின் படிப்புச் செலவிற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படித்து சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது மகளின் கனவு நினைவாகும்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மருத்துவக் கனவை நனவாக்கிய தையல் மெஷின்.. “நீட் தேர்வு கடினமில்லை”.. எம்பிபிஎஸ் மாணவரின் முதல் உச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.