ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை: மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு! - MAYILADUTHURAI HELPLINE NUMBERS

வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ள நிலையில், 400 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 1:30 PM IST

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை முதல் இரவு 10:30 மணி வரை மிதமான மழை பெய்தது.

அதன்படி, மயிலாடுதுறையில் 26.50 மிமீ, மணல்மேடு 24 மிமீ, சீர்காழி 27.20 மிமீ, கொள்ளிடம் 25.80 மிமீ, தரங்கம்பாடி 26.60 மிமீ, செம்பனார்கோவில் 36.60 மிமீ என மொத்தம் மாவட்ட முழுவதும் பரவலாக 166.70 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று இரவு 10:30 மணி முதல் இன்று காலை 10.00 மணி வரை மழை பொழிவு இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

மீனவர்களுக்கு உத்தரவு: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றிருக்கும் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து கரைக்குத் திரும்பவும் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: கனமழைக்கு தயாரான சென்னை..! வேளச்சேரி பாலம் முதல், கோவளம் படகு வரை

இதனால், மயிலாடுதுறையில் உள்ள உள்ள சின்னூர் பேட்டை, சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், தொடுவாய், கொடியம்பாளையம் வரை உள்ள 28 மீனவ கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

மேலும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் கரைக்குத் திரும்பியுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், தங்களது 400 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக முகத்துவாரம் மற்றும் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

புகார் எண்: மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கான மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் 04364 - 222588 மற்றும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 04364 - 1077 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

  • மயிலாடுதுறை காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 94426-26792
  • மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 04364-252218
  • சீர்காழி கோட்டம் தொலைப்பேசி எண் - 04364-279301 9445854006,
  • மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 04364-222277, 8668171501,
  • சீர்காழி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 04364-276336, 9842382883
ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.