சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகை தின்பண்டங்கள் அடங்கிய ‘மதி’ தீபாவளி பரிசுப் பெட்டகம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த வகையில், வள்ளுவர் கோட்டத்தில் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் சாலையில், அன்னை தெரசா வணிக வளாகத்திற்கு முன்பாக ‘மதி’ பல்பொருள் அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஸ்வீட் பெயர் | கிராம் | விலை |
சாமை | 250 | ரூ.400 |
கை முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு | 250 | ரூ.100 |
அரிசி முறுக்கு | 250 | ரூ.200 |
கேப்பை லட்டு மற்றும் நரிப்பயிறு லட்டு | 500 | ரூ.450 |
கருப்புகவுணி லட்டு, கருப்பு உளுந்து லட்டு | 100 | ரூ.450 |
தினை லட்டு, சாமை லட்டு | 500 | ரூ.450 |
பிங்க் ரோஸ் லட்டு, ஆவாரம் பூ லட்டு | 5 எண்ணிக்கை | ரூ.150 |
இதையும் படிங்க: தீபாவளி பட்டாசை உங்க குழந்தைங்க பாதுகாப்பா வெடிப்பது எப்படி? சுகாதாரத் துறை அறிவுறுத்தல்கள் இதோ!
தீபாவளி கிப்ட் பாக்ஸ்:
கிப்ட் பாக்ஸ் | விலை |
பனை ஓலை பொருள்கள், குத்துவிளக்கு, விநாயகர் சிலை | ரூ.1,100 |
மெழுகுவர்த்தி, நறுமண எண்ணெய், வாசனை திரவியம் | ரூ.350 |
தஞ்சாவூர் கண்ணாடி வரைபடம், மெழுகுவர்த்தி | ரூ.700 |
மெழுகுவர்த்தி, லிப் பாம் | ரூ.300 |
தஞ்சாவூர் பொம்மைகள் | ரூ.250 |
6 நறுமண எண்ணெய்கள் | ரூ.1000 |
தீபாவளி பிரத்யேக விற்பனை குறித்து, மதி அனுபவ அங்காடியில் பணிபுரியும் வஹிதா பானு கூறுகையில், “மதி அங்காடி மகளிருக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் அங்காடியாகும். 38 மாவட்டத்தில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் இந்த அங்காடியில் விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு பண்டங்களில் சிறப்புத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளோம்.
இதில், தினை வகைகள், சிவப்பு அரிசி, சாமை போன்ற உணவுப்பொருட்களை வைத்து இனிப்புகள் தயார் செய்யப்படுகிறது. சமுக வலைதளைங்களிலும் இது குறித்த பதிவுகள் வெளியிட்டுள்ளோம். இங்கு விற்கப்படும் பொருட்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தனித்துவமாக பொருட்கள் மட்டுமே இங்கு விற்கப்படுகிறது.
தினை வகைகள், லட்டு, முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, உலர்ந்த பழங்களில் செய்யக்கூடிய லட்டு, கருப்பு உளுந்து லட்டு போன்ற உணவு பொருட்கள் விற்கப்பட்டுகிறது. மேலும், அந்தந்த ஊர்களில் சிறப்பாக உள்ள கைவினை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆர்கானிக் பொருட்கள் மட்டுமே இங்கு விற்கப்படுகின்றன. இதில் எந்தவிதமான கலப்படமும் இல்லை.
வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேவையான பொருள்களைக் கொண்டு பரிசுப் பெட்டகம் தாயர் செய்யப்படுகிறது. இதன் ஆரம்ப விலையானது 1,100 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. இனிப்பு பொருட்களின் விலை 150 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, விற்பனை நன்றாவே இருக்கிறது. வெளியூர்களில் இருந்து ஆர்டர் செய்பவர்களுக்கு கொரியர் மூலமாகவும் அனுப்பப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்