விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில், இதே ஊரைச் சேர்ந்த வீராச்சாமி (60) என்பவருக்குச் செந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள நுழைவாயிலில் இன்று மாலை ஆலையில் உள்ள கழிவு தீக்குச்சிகளை மினி லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது.
அப்போது, உராய்வின் காரணமாக தீப்பற்றி உள்ளது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கழிவு தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகளை ஏற்ற வந்த மினி லாரி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மேலும், இந்த விபத்தில் கீழஒட்டம்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் (28), சாத்தூரைச் சேர்ந்த கலைவாணன் (32) ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 பேர் உயிரிழந்த விவகாரம்..சிவகாசி பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமம் ரத்து! - PESO Cancels Nagpur License