ETV Bharat / state

கடும் ஏற்றுமதி பாதிப்பைச் சந்திக்கும் தீப்பெட்டி.. ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு? என்ன தான் தீர்வு? - Matchbox Export Stop issue - MATCHBOX EXPORT STOP ISSUE

Matchbox Export problem: கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீப்பெட்டி உரிமையாளர்கள்
தீப்பெட்டி உரிமையாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 12:22 PM IST

Updated : Sep 4, 2024, 1:07 PM IST

தூத்துக்குடி: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தீப்பெட்டி தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும், கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் அதிகளவில் பெண்கள் தான் வேலை செய்து வருகின்றனர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த தீப்பெட்டித் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் களைகட்டும் லைட்டர் விற்பனை: ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஆனால் அது தான் உண்மை என்கின்றனர். சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மேலும், லைட்டர்களை ரூ.20க்கு குறைவாக இந்தியாவில் விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்த போதிலும், கள்ளச்சந்தை வழியாக கொண்டுவரப்பட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

ஒருபுறம் பற்றாக்குறை.. மறுபுறம் விலையேற்றம்: அதுமட்டுமின்றி, தற்போது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த தீப்பெட்டியும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கண்டெய்னர் விலை ஏற்றம் தான் என்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய தீப்பெட்டிகள், தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தீப்பெட்டியைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் கண்டெய்னர்கள் பற்றாக்குறை ஒருபுறம், மறுபுறம் அதன் விலை ஏற்றம். இதனால் கடந்த 8 மாதங்களாக வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஏற்கனவே உள்நாட்டில் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளதால் அதிகளவில் பாதிப்படையக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தீப்பெட்டி ஏற்றுமதிக்கு அரசு மானியம்: பிளாஸ்டிக் லைட்டர் பிரச்னை காரணமாக வாரத்திற்கு 4 அல்லது 5 நாட்கள் மட்டும் தான் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது. தற்போது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்பதால், இனி வேலை நாட்களைக் குறைக்கலாமா என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கண்டெய்னருக்கு அதிக விலை கொடுத்து தீப்பெட்டியை விற்பனைக்கு அனுப்பினால், மற்ற நாடுகளை விட இந்தியாவின் தீப்பெட்டி விலை அதிகமாக உள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்படும் சூழலையும் ஏற்படுத்துகிறது.

ரூ.16 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல் கொண்டு செல்வதற்கு ரூ.2 லட்சம் வாடகை கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.6 முதல் 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கண்டெய்னர் மூலமாக துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படும் தீப்பெட்டிகளுக்கு அந்த அரசு மானியம் வழங்கி வருகிறது. அதேபோன்று, இந்திய அரசும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறுகையில், "தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 90% பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியது இந்த தீப்பெட்டி தொழில். தற்போது 2 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

காரணம், சீன லைட்டர்களை 20 ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும், கிராமங்கள் மற்றும் ஒரு சில நகரங்களில் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தீப்பெட்டி தொழில் நலிவடைந்தது மட்டுமின்றி, தீப்பெட்டி பண்டல் அடக்கச் செலவும் அதிகரித்துவிட்டது. மேலும், மின்கட்டணம் உயர்வு, லாரி வாடகை, கூலி உயர்வு உள்ளிட்ட விலையேற்றத்தால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம்.

கடந்த ஒரு மாத காலமாக தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய கண்டெய்னர் வாடகை அதிகரித்துவிட்டதால், ரூ.100 கோடிக்கு மேலான தீப்பெட்டிகள் தமிழகத்திலேயே தேங்கிவிட்டது. மேலும், இத்தீப்பெட்டிகளை வெளிநாட்டுக்கு அனுப்பாததால், இந்தியாவில் விலை குறைத்து விற்பனை செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய நீர்வழித் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, கண்டெய்னர் வாடகையை குறைக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கண்டெய்னர்கள் வாடகையை திடீரென்று 3 முடங்கு உயர்த்தியுள்ளது. ஆனால், தீப்பெட்டி அடக்கச் செலவுக்கு ஏற்ப விற்பனை விலை இல்லை. இதனால் தீப்பெட்டித் தொழில் மிகவும் நலிவடைந்து, சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். ஆகவே, தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி, தமிழக முதலமைச்சர் மத்திய அரசை அணுகி இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், தீப்பெட்டி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு மூலமாக மத்திய அரசிற்கு எங்களது எதிர்ப்பு குரலைக் காட்டுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளி வென்ற அடுத்த கணமே வந்த கால்.. கால்நடை மருத்துவரின் பாராலிம்பிக்ஸ் கனவு சாத்தியமானது எப்படி?

Last Updated : Sep 4, 2024, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.