சென்னை: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், ரேஸ் கிளப் நிர்வாகம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகையை வட்டியுடன் வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டி ரேஸ் கிளப் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்ப்பாட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிலையில், இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை அரசு ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானமாக்க கோரியும், இதில் ஏழை எளிய மக்களுக்கான குடியிருப்புகளை அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "நேற்று முதல்வர் காக்கி பேண்ட் போட காரணம் என்ன?”.. திமுக - பாஜக உறவு.. சீமான் கடும் சாடல்!
முதலில் கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 800 கோடி வாடகையை வட்டியுடன் வசூல் செய்ய வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்ட கல்வி வளாகமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தின் போது திடீரென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் சென்று அமர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டகாரர்களை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி சென்றனர்.