ராமநாதபுரம்: பரமக்குடி லெனின் தெருவை சேர்ந்தவர் மேகலா(25). பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேகலா தனது குழந்தைகளுடன் அவரது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது மேகலாவிற்கு, மணிகண்டன் என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவருக்கும் கறுத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மேகலா, மணிகண்டன் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று(ஜூன் 23) மேகலா, பெரிய கடை பஜாரில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு சென்ற மணிகண்டன், "ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய்" எனக் கேட்டு ஆத்திரத்துடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் மேகலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பரமக்குடி நகர் போலீசார் மேகலாவின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேகலாவை கொலை செய்த மணிகண்டனை கைது செய்தனர். பரமக்குடி நகரின் முக்கிய பஜார் பகுதியில் இளம் பெண்ணை ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 18 மீனவர்களுடன் 3 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை! ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம்.. - 18 Rameswaram Fishermen Arrested