ஓசூர்: சிட் ஃபண்ட் துறையில் நம்பகத்தன்மையுடன், முன்னணி நிறுவனமாக திக்ழ்ந்து வரும் 'மார்கதர்சி சிட் ஃபண்ட் தனது 120வது கிளையை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இன்று திறந்துள்ளது.
ராமோஜி குழுமத்தின் மார்கதரிசி சிட்ஸ் நிறுவனம் 62 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சேவை செய்துவரும் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம், இன்று (டிச.11) தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமது புதிய கிளையை திறந்துள்ளது.
புதிய கிளையை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் அவர்கள் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தார். இதன் மூலம் நான்கு மாநிலங்களில் மொத்தம் 120 கிளைகளாக நிறுவனம் விரிவடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை 11 மணியளவில் கர்நாடகா மாநிலம் கெங்கேரியில் மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனத்தின் 119 வது கிளை திறக்கப்பட்டது.
புதிய கிளை திறப்பு விழாவில் ஒசூர் மேயர் சத்யா, ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஒசூர் துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திருமதி செருகுரி சைலஜா கிரண் அவர்கள்:
ஒசூரை ஆங்கிலேயே காலத்தில் குட்டி இங்கிலாந்து என அழைத்தனர். அதற்கு காரணம் ஒசூர் பகுதி எப்போதும் குளிர்ந்த பகுதியாக இருக்கிறது. ஒசூரை ரோஜா நகரமென்றும் அழைக்கிறார்கள்.
இன்று கர்நாடகா மாநிலத்தில் 119 வது கிளையை திறந்து வைத்த நான், தமிழகத்தில் 18 வது கிளை மற்றும் மார்கதர்சி நிறுவனத்தின் 120 வது கிளையை ஓசூரில் இன்று திறந்து வைத்துள்ளேன்.
கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என 4 மாநிலங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளோம். எங்களிடம் எளிய மக்கள் தங்களது பணத்தை சேமிக்கும் வகையில் மாதந்தோறும் குறைந்த தொகை முதல் சீட் நடத்துவதால் கல்வி, தொழில், விவசாயம், குடும்பத்தின் பிற தேவைகளுக்காக பணத்தை சேமிக்கின்றனர்
பெங்களூருக்கு அருகாமையில் உள்ள 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒசூர் நகரத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக அசோக் லைலாண்டு, டிவிஎஸ், நெரோலக், டைட்டான் என பல தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களின் நலனிற்காக எங்கள் நிறுவனம் பயன்படும்.
சிட்ஸ் சம்பந்தமாக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, அரசு சட்ட திட்டங்களை மதித்து அனைத்தும் முறையாக நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை காப்பாற்றுவோம்."என்று சைலஜா கிரண் கூறினார்.
1962 முதல் இந்நிறுவனம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ள மார்கதர்சி சிட் பண்ட், ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான டர்ன் ஓவர் செய்துள்ளது.