ETV Bharat / state

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்? வேலூரில் தேர்தல் பிரச்சாரம்! - india jananayaga puligal party

Mansoor Ali Khan: இந்திய ஜனநாயக புலிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நடிகர் மன்சூர் அலிகான் வேலூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:21 PM IST

Updated : Mar 18, 2024, 9:16 AM IST

மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு

வேலூர்: இந்திய ஜனநாயக புலிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் மன்சூர் அலிகான். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். வேலூர் மாவட்டம் வேலூரில் லாங்கு பஜார் பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட்டில் இன்று(மார்ச் 17) தொடங்கினார்.

இந்த பிரச்சாரத்தின் பொழுது அங்குள்ள வியாபாரிகளிடம் வாக்குகளைச் சேகரித்தார் மேலும் இவர் வந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் அவருடன் இணைந்து தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணா கலையரங்கம் அருகே உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்கள் சந்தித்த மன்சூர் அலிகான் பேசுகையில், " இன்றைய மது கஞ்சா உள்ளிட்ட போதல் பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனைப் பொது அஜெண்ட்வாக வைத்து வேலூரில் களம் காண்கின்றேன். பெரிய கட்சிகள் நிற்கின்றன பல்லாயிரம் கோடியைச் செலவழிப்பார்கள், மாற்றம் வேண்டும் என்பதற்காக எனக்கு மக்கள் உதவுவார்கள் என்ற பலத்தில் நிற்கிறேன் என்றார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் பரவி வருகிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பொதுச் செயலாளருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பொதுச் செயலாளராகப் பாலமுருகன் என்பவர் உள்ளார்.

அதற்கு மேல் நான் ஏதும் கூற விரும்பவில்லை. கட்சியில் அவர் ஒரு மாதமாகத் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு நோக்கத்தோடு அவரை அனுப்பி உள்ளனர். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது அவருக்கு ஏதாவது கட்சியினர் பணம் கொடுத்து இது போல் பேசச் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள் போலா, மற்ற கட்சியினர் அவருக்குப் பணம் கொடுத்திருந்தால் எனக்குச் சந்தோஷம்தான்.

கதிர் ஆனந்த் மற்றும் ஏ.சி.எஸ் ஆகியோர் வேலூரில் பலம் பொருந்தியவர்கள் களம் காணுகின்றனர் இந்த தேர்தலை நீங்கள் பொதுமக்களிடம் எந்தவிதத்தில் கையாளுவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரிய பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

அவர்களை வீழ்த்த நான் எளிமையைக் கையாளப் போகிறேன் கண்டிப்பாக நான் வீழ்த்துவேன் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அவர்கள் லட்சம் லட்சமாக மக்களுக்குப் பணம் கொடுக்கலாம். அதனால் மக்கள் பயனடையலாம். அவர்கள் பிணவறையில் பணத்தை அடக்கி வைத்து விட்டு வருபவர்கள். அவர்கள் பெரியார் அண்ணா போன்ற தலைவர்களை முன்னிறுத்துகின்றனர் ஆனால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரிய கோடீசுவரர்களாக உலகப் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்.

நான் எளியவர்களுக்கான ஆட்சியை உருவாக்க வந்துள்ளேன் மக்களுக்கான உழைப்பாளியாக நான் இருப்பேன் நான் பாராளுமன்றத்தில் மக்களுக்காகப் போராட முடியும் அவர்கள் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். கண்டிப்பாக காட்டன் சூதாட்டம், மது மற்றும் கஞ்சா ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பேன் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன் எனக் கூறினார்.

இதையும் படிங்க: தவெக-வின் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு..காரணம் என்ன?

Last Updated : Mar 18, 2024, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.