ETV Bharat / state

மதம் மாறினால் ரூ.10 கோடி என மோசடி.. தஞ்சாவூர் இளைஞர் சிக்கியது எப்படி? - Thoothukudi Online Cheating - THOOTHUKUDI ONLINE CHEATING

Thoothukudi Online Cheating: தூத்துக்குடியில் மதம் மாறினால் ரூ.10 கோடி பணம் தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Money Scam as Rs 5 Crore if you Convert the religion
மதம் மாறினால் பணம் என மோசடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 11:21 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐஎம்ஒ (IMO) என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற ஐடியிலிருந்து (ID) தொடர்பு கொண்ட மர்ம நபர், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாகக் கூறியுள்ளார்.

மேலும் அதற்காக, அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடங்கவும், வருமானவரி செலுத்துவது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக இளைஞரிடம் பணம் கேட்டுள்ளார். அதனை நம்பிய கோவில்பட்டி இளைஞர் 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாயை ஜிபே(Gpay) மூலமாக பணம் அனுப்பியுள்ளார்.

பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை தெரிந்துகொண்ட இளைஞர், இதுகுறித்து என்சிஆர்எப் (NCRP - National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனின் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார், மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்கத் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல்(31) என்பவர், பாதிக்கப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் நேற்று முன் தினம் தஞ்சாவூர் சென்று, ராஜவேலின் வீட்டருகே வைத்து அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர், நீதிமன்றம் எண். IV-ல் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கையில் இருந்து சென்னை வந்த 24 ராமேஸ்வரம் மீனவர்கள்! - Fishermen Arrived Chennai Airport

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.