ETV Bharat / state

கோத்தகிரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு! - ELEPHANT DEAD By ELECTRIC SHOCK

Elephant dead due to electric shock: கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியில் தனியார் எஸ்டேட்டை கடந்து செல்லும் மின்வாரியத்திற்குச் சொந்தமான மின் கம்பியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

வனத்துறையினர் யானையை ஆய்வு செய்யும் புகைப்படம்
வனத்துறையினர் யானையை ஆய்வு செய்யும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 7:49 PM IST

நீலகிரி: கோத்தகிரி பகுதியில் உணவு தேடி வந்த ஆண் யானை ஒன்று, அங்கிருந்த மரத்தை முட்டி தள்ளியதில், மரம் முறிந்து மின் கம்பி மேல் விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்ததில் யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி குஞ்சப்பனைப் பகுதியில் விளைந்துள்ள பலாப்பழங்களை உண்பதற்காக உணவு தேடி வரும் யானைகள், அவ்வப்போது அப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று அங்குள்ள மரம் ஒன்றை 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை முட்டி தள்ளியதில் மரம் முறிந்து, மின்வாரியத்திற்குச் சொந்தமான மின் கம்பி மேல் விழுந்துள்ளது. இதிலிருந்து மின்சாரம் தாக்கியதில் அந்த ஆண் யானை உயிரிழந்தது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “புளியன் என்பவரது கன்டிஷன் பட்டா நிலத்தில் இருந்த மரத்தை 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று முட்டி தள்ளியுள்ளது. அப்போது மரம் மின் கம்பி மீது விழுந்து, அதில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அந்த ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், கோத்தகிரி வனச்சரக அலுவலர், வனப் பணியாளர்கள், வன ஆர்வலர்கள், மின்சார வாரியத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் உடனிருக்க, முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோத்தகிரி கால்நடை உதவி மருத்துவர் ரேவதி ஆகியோர், இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் பேரனைக் காப்பாற்றி தன்னுயிரை விட்ட பாட்டி.. தேனியில் நெஞ்சை பிழியும் சம்பவம்! - Theni Train Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.