ETV Bharat / state

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வதென்ன? - MAHARASHTRA ELECTION RESULT

"மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. இத்தேர்தல் முடிவுகள் சந்தேகத்தை எழுப்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 7:16 PM IST

சென்னை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.

அதே போல் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இனிப்பு வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதே போல் கர்நாடகா மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கின்றது. ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி ஒரு தகவலை சொல்லி இருக்கின்றார். அதாவது, 'வேலை பேப்பரை (work sheet) சரியாக கணக்கெடுத்தாலே தேர்தல் வாக்கு சதவீதம் தெரிந்து விடும். ஆனால் இரண்டு தினங்கள் கழித்து 6 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளதாக' தெரிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்புகின்றது.

இதையும் படிங்க: “மதம் என பிரிந்தது போதும்..” பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு நாகத்தம்மாள் கோயிலில் இருந்து சீர்வரிசை!

இன்னும் இரண்டு நாட்களில் இதுகுறித்து ஆய்வு செய்து பத்திரிகையாளர்கள் மத்தியில் உண்மை நிலவரம் தெரிவிக்கப்படும். அதானியின் பெரும்பலம் மதவாத பிளவு சக்தி என எதையெல்லாம் கையாள முடியுமோ அதை எல்லாம் பாஜக கையாண்டு இருக்கின்றது. பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றார்கள்.

15 லட்சம் தருவேன் என்றார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன் என்றார்கள் நிறைவேற்றி உள்ளார்களா? இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவோம் என தெரிவித்தார்கள். ஆனால் மாற்றினார்களா என கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக சொல்லாத ஒரு வாக்குறுதி நிறைவேற்றி உள்ளார்கள். அது அதானியைய பெரும் பணக்காரர் ஆக்கியுள்ளது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களையும் கப்பல் மின்சாரம் என அனைத்தையும் அதானிக்கு கொடுப்பதுதான் அவர்கள் நிறைவேற்றியுள்ள வாக்குறுதி என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.