மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2,08,795 வாக்குகள் வித்தியாசத்தில் 4,29,581 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வ.எண் | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
1. | திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் (வெற்றி) | 4,29,581 |
2. | அதிமுக வேட்பாளர் சரவணன் | 2,04,652 |
3. | பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் | 2,20,786 |
4. | நாதக வேட்பாளர் சத்தியதேவி | 92,754 |
மதுரை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் இரண்டாவது முறையாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த தேர்தலை காட்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- 5 மணி நிலவரப்படி, மதுரை மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 400998 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 190601 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 205355 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்திய தேவி 85678 வாக்குகளும் பெற்றிருந்தனர். தற்போது திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை விட 195643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
- 4 மணி நிலவரப்படி, மதுரை மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 371927 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 177780 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 190293 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்திய தேவி 78692 வாக்குகளும் பெற்றிருந்தனர். தற்போது திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக வேட்பாளரை விட 181634 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
- மதுரை மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 3,36,668 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 1,64,002 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 1,73,094 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்திய தேவி 72,082 வாக்குகளும் பெற்றிருந்தனர். - 3.35PM நிலவரம்
2024 வேட்பாளர்கள் : திமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் டாக்டர் சரவணன், பாஜகவில் வேட்பாளர் ராம. சீனிவாசன், நாதகவில் சத்திய தேவி களமிறக்கப்பட்டுள்ளார்.
2019 வெற்றி நிலவரம்: 2019 மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில் 10,16,026 வாக்குகள் 67.8 % பதிவாகின. திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,47,075 வாக்குகளை அள்ளினார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 44.20 சதவீதம். அதிமுகவின் வி.வி.ராஜ் சத்யன் 3,07,680 (30.42%) வாக்குகளை பெற்று இரண்டாமிடம் பிடித்தார். மக்கள் நீதி மய்யத்தின் அழகர் - 85,048 -( 8.41%), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் - 42,901 (4.24%) ஓட்டுகளையும் வாங்கினர். குறிப்பாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை - 85,747 (8.48%) வாக்குகளை பெற்று அனைத்து கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை... சூடான தேர்தல் களம்! மதுரையில் வெற்றி யாருக்கு? - Lok Sabha Election 2024