ETV Bharat / state

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு! - DHANUSH AISHWARYA DIVORCE

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி நடைபெற்ற அவர்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா (Credits - DHANUSH AND aishwarya SOCIAL MEDIA PAGES)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 8:31 PM IST

சென்னை : திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ்-க்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில், திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரினர்.

வழக்கு தொடர்பான விவரங்கள்
வழக்கு தொடர்பான விவரங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. முதலில் ஆறு மாத காலம் இருவருக்கும் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தார். பின்னர், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருவரும் இரண்டு முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. எனவே வழக்கு மீண்டும் தள்ளி வைக்கபட்டது.

இந்நிலையில் கடந்த நவ 21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராகினர். அப்போது இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், இருவரும் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டனர்.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நவ 27ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தள்ளிவைத்தார். அதன்படி, இந்த வழக்கில் இன்று (நவ 27) நீதிபதி சுபாதேவி இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி நடைபெற்ற திருமணம் பதிவை ரத்து செய்வதாகவும் அறிவித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.