சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் சுமார் 10 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தென்மேற்கு வங்கக் கடலில் தென்மேற்கு வங்கக் கடலில் தென்கிழக்கே திருச்சிக்கு 240 கிமீ தொலைவில் அதாவது புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 720 கிமீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இது தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் இலங்கைக் கடற்கரையைத் தாக்கும் என்றும் அதனால் மோசமான வானிலை சூழல் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: ஃபெங்கல் புயல் எதிரொலி: ஆக்ரோஷமாக மாறிய வங்கக்கடல்!
இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் கடற்படையினர் மற்றும் கடலோர சொத்துக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை அரசு முகமைகள் மூலம் மீனவர்கள் மற்றும் பிற கடற்படையினருக்கு முன் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மோசமான வானிலை சூழல் காரணமாக,கடலில் உள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை பாதுகாப்புக்காக துறைமுகத்திற்குத் திரும்புவதற்கு, கப்பல்கள்,விமானம், ரேடார் நிலையம் ஆகியவற்றில் இருந்து வானொலி மற்றும் கஒலிபெருக்கிகள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடலில் ஏற்படும் அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள உயர்ந்தபட்ச எச்சரிக்கை நிலையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால், இந்திய கடலோர காவல்படை போதுமான ஆட்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு பேரிடர் நிவாரணக் குழுக்களை அமைத்திருக்கிறது. இந்த குழுக்கள் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் தயார் நிலையில் உள்ளன,"என கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்