ETV Bharat / state

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! - EVKS ELANGOVAN

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்  கோப்புப்படம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் கோப்புப்படம் (ஈடிவி பாரத் தமிழ்நாடு)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 10:44 PM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வருவதாகத் தெரிகிறது.

காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த 11 ஆம் தேதி மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.