ETV Bharat / state

பெரிய சிக்கல்; எளிய தீர்வு - ஆட்டோ ஓட்டுநர்களை அசத்திய பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக்! - சமீபத்திய கண்டுபிடிப்புகள்

Invention Of Water Wiper: ஆட்டோ ஓட்டும் போது கண்ணாடிகளில் விழும் தூசி மற்றும் எச்சங்களைத் துடைப்பதற்குத் தனது கண்டுபிடிப்பின் வாயிலாக எளிய தீர்வு ஒன்றைத் தந்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக். இந்த கண்டுபிடிப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்காக தண்ணீர் வைப்பர்களை கண்டறிந்த பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 5:44 PM IST

பெரிய சிக்கல்; எளிய தீர்வு - ஆட்டோ ஓட்டுநர்களை அசத்திய பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக்!

மதுரை: பொதுவாக வாகனங்களில் உள்ள வைப்பர்கள் (Wipers) ஓட்டுநருக்கு முன்பாக உள்ள கண்ணாடிகளைச் சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும். முன்புற கண்ணாடிகளில் ஏதேனும் அழுக்குகள் இருப்பின் அதனை இந்த வைப்பர்கள் துடைத்து சுத்தம் செய்யும். மேலும், இத்துடன் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் உமிழும் அமைப்பின் காரணமாகக் கண்ணாடியைத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, பயணத்தின் போது எந்தவித இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

கார்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களிலும் இது போன்ற அமைப்புகள் உள்ள நிலையில் ஆட்டோக்களில் இது போன்ற வசதிகள் இல்லை. ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ போன்ற வாகனங்களில், அதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வசதியைச் செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் மேற்கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் சிக்கலைச் சந்திப்பதோடு, சில நேரங்களில் விபத்துக்களுக்கும் ஆளாகின்றனர்.

இந்த ஆட்டோ ஓட்டுநர்களின் நிலையை உணர்ந்த பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக், மிக மிகக் குறைந்த செலவில் அதற்கான தீர்வினைக் கண்டறிந்துள்ளார். இது ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பெரிதும் மனநிறைவைத் தந்துள்ளது என்பது தான் குறிப்பிடற்குரியது.

மதுரை பீ.பி குளம் பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் மேற்கொண்டு வரும் சேதுராமன் என்பவர் கூறுகையில், "நான் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். மழைக்காலங்களில் ஆட்டோ ஓட்டும் போது மிகவும் சிரமமாக இருக்கும். கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர்த்தி வலைகளை உடனடியாக இறங்கித் துடைக்க இயலாது. அதேபோன்று பறவைகளின் எச்சம் கண்ணாடி முழுவதும் பரவி சாலையை மறைத்துவிடும்.

எங்களது ஆட்டோ ஸ்டாண்ட் மருத்துவமனை அருகே இருக்கின்ற காரணத்தால், நிறைய நோயாளிகள் எங்களது ஆட்டோக்களைப் பயன்படுத்துவார்கள். அவர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்துச் செல்லும் போது, மழை, பறவைகள் எச்சம் போன்ற சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும். அப்போது, வாகனத்தை நிறுத்தி விட்டுத் துடைக்கவும் முடியாது. இதற்கு ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பைச் செய்து தர வேண்டும் என பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக்கிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

அவர் இரண்டு நாட்கள் இது குறித்து எங்களிடம் முழுவதுமாகக் கேட்டறிந்தார். பின் உடனடியாக ஆட்டோவில் உள்ள வைப்பர் ஓடும் போது அதிலிருந்து, தண்ணீர் உமிழும் வகையில் தீர்வை உருவாக்கிக் கொடுத்தார். இதனால் தற்போது, எந்த சூழ்நிலையிலும் சாலையைத் தெளிவாகப் பார்த்து ஆட்டோவை ஓட்டிச் செல்ல முடிகிறது. மழைக்காலம், இரவு நேரங்களில் எங்களின் முன்னே உள்ள வாகனம் நிற்கிறதா, செல்கிறதா என்பதை எங்களால் பார்க்க முடியாத நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதற்கான செலவு வெறும் 300 ரூபாய் மட்டும் தான். அதனை இரண்டு சவாரிகளில் நாங்கள் எடுத்து விடுவோம். ஆனால், இதன் மூலம் எங்களை நம்பி ஆட்டோவில் ஏறும் பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறோம் என்பதில் எங்களுக்கு மிகவும் திருப்தி" என்றார்.

பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக் இருபக்க டேபிள் ஃபேன், குழிக்குள் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்றும் கருவி, பார்வையற்றோருக்கான ஒலி எழுப்பும் வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்ட 50 கண்டுபிடிப்புகளைச் உருவாக்கியுள்ளார். ஒருவரின் தேவையைப் பொறுத்தே இவரது கண்டுபிடிப்புகள் அனைத்தும் உள்ளன. அது போன்றே தற்போது ஆட்டோ ஓட்டுநர்களுக்காகக் கண்டுபிடித்துள்ள இந்த வாட்டர் வைப்பரும்.

இது குறித்து விஞ்ஞானி அப்துல் ரசாக் கூறுகையில், "நான் இதற்கு முன்பு 50 கண்டுபிடிப்புகள் வரை செய்து, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடம் விருது வாங்கி உள்ளேன். என்னைத் தெரிந்தவர்கள் என்னிடம் அவர்களுக்கான பிரச்சனைகளைக் கூறி தீர்வுகளைக் கேட்பார்கள்.

நான் அவர்களுக்கு ஏற்றாற்போன்று தீர்வினை உருவாக்கி தருவேன். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதற்காக, அவர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கி வருகிறேன். எனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் அவர்களது சிக்கலைச் சொல்லி என்னிடம் உதவி கேட்டார்கள். மழையில் சாரல் கண்ணாடியில் புள்ளி புள்ளியாய் ஒட்டிக் கொண்டு இருக்கும்.

அதே போன்று பூச்சிகள், பறவைகளின் எச்சங்கள் கண்ணாடியில் பட்டு அதன் பிசுக்குகள் கண்ணாடி முழுவதும் பரவிவிடும். அப்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுநர்களால் தொடர்ந்து ஆட்டோவை இயக்க முடியாது. மிகவும் சிரமமாக இருக்கும். இந்த சிக்கலைத் தீர்க்க சேதுராமன் உள்ளிட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் ஒரு தீர்வைக் கேட்டனர். அவர்களது ஆட்டோ கண்ணாடியில் தண்ணீரோடு வைப்பர் உருவாக்கிக் கொடுத்தால் அவர்களுக்கான சிக்கல் தீரும் என்பதைக் கண்டறிந்து, ஒரே இரவிலேயே அதனைச் செய்து கொடுத்தேன்.

தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பிளாஸ்டிக் குடுவை, உள்ளங்கை அளவிலான 9 வோல்ட் நீர் மூழ்கி மோட்டார், அதனை அந்தத் தண்ணீர்க் குடுவைக்குள்ளேயே வைத்துவிடலாம். அக்குடுவையின் மூடியில் ஆன், ஆஃப் ஸ்விட்ச், அதனுடன் ஒன்றரை மீட்டர் நீளமுள்ள சிறிய லெவல் ட்யூப்.

இதனை வைப்பருடன் இணைத்து ஆன் செய்துவிட்டால் போதும். வைப்பர் ஓடும் போதே இதிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும். வைப்பருக்கும், தண்ணீருக்கும் தனித்தனி ஸ்விட்ச். தேவைப்படும் போது மட்டுமே தண்ணீருடன் வைப்பரைப் பயன்படுத்தலாம். இவற்றுக்கான மொத்த செலவு 300 ரூபாய் தான். இதன் மூலம் ஆட்டோ ஒட்டுநர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனகாபுத்தூரில் சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை.. விமானம் மூலம் அயோத்திக்குச் சென்றடைந்தது..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.