ETV Bharat / state

மதுரை மாவட்டத்தில் தயாராகும் உருண்டை வெல்லம்...பொங்கலை இனிப்பாக்கும் சிறு சர்க்கரை ஆலைகள்! - JAGGERY PRODUCTION IN MADURAI

தைப்பொங்கலை ஒட்டி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'உருண்டை வெல்லம்' உற்பத்தி விறுவிறுப்பாய் நடைபெற்று வரும் நிலையில் சிறு,குறு சர்க்கரை ஆலைகளில் வெல்லம் தயாரிப்பில் ஈட்டுப்பட்டுள்ளவர் கூறும் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சர்க்கரை ஆலை, வெல்லம்
சர்க்கரை ஆலை, வெல்லம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 1:39 PM IST

மதுரை: தமிழர் திருநாளாம் தைப் பொங்கலில் தவறாது இடம் பெறுவது 'உருண்டை வெல்லம்'. பொங்கலின் சுவையைக் கூட்டம் இந்த உருண்டை வெல்லத்தின் நன்மைகள் ஏராளம். இந்நிலையில் மதுரையைச் சுற்றிப் பல நூறு சிறு,குறு சர்க்கரை ஆலைகள் பொதுமக்களின் தேவையை ஈடு செய்து வருகின்றன.

கரும்பு உற்பத்தி: தமிழக அரசு 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண்துறை செயல்திட்டத்தில் கரும்பு உற்பத்திப் பரப்பை 1.75 லட்சம் ஹெக்டேராகவும், அதன் மூலமாக உற்பத்திப் பொருட்களை 231 லட்சம் மில்லியன் டன்னாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

சர்க்கரை ஆலைகள்: தற்போது தமிழகம் முழுவதும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார் சர்க்கரை ஆலைகளும் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்ட சிறு, குறு ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகள் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான மிகப் பெரும் ஆதாரமாகத் திகழ்கின்றன. தற்போது 1.50 லட்சம் பேர் கரும்பு விவசாயிகளாக உள்ளனர். சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் 4ஆம் இடத்தில் உள்ளது.

“வெல்லத்திற்கு முன்னுரிமை தர வேண்டும்” இது குறித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கொண்டையம்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியில் இயங்கி வரும் கிருஷ்ணன் கரும்பு ஆலையின் உரிமையாளரும், கொண்டையம்பட்டி கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணன் கூறுகையில், “தமிழர்களின் பண்பாட்டை ஒட்டிய சிறப்பான உணவுப்பொருள் இந்த வெல்லம். இதற்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்த வேண்டும். நாட்டுச் சர்க்கரையிலிருந்து வெல்லம் வரை சிறுகுழந்தைகளுக்குக்கூடப் பயன்படுத்தக்கூடிய சிறந்த பண்டம்.

ஆலை உரிமையாளர், பணியாளர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு அரசும், பொதுமக்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எங்களது ஆலையைப் பொறுத்தவரை 25 பேர் வேலை செய்கின்றனர். தற்போது நாட்டுச்சர்க்கரையின் பயன்பாடு குறைந்து கொண்டு வருவதைப் போன்று உணர்கிறேன்.

மலையாள வெல்லம் உருண்டை: நாங்கள் உருட்டுகின்ற மலையாள உருண்டை கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனைக்காகச் செல்கிறது. எந்த விதமான இரசாயனப் பொருட்களும் இதில் சேர்க்கப்படுவதில்லை. ஆகையால் வண்ணத்தோடு இருப்பதில்லை. எங்களது உற்பத்தியில் அதிகப்படியான வெல்லம் கேரள மாநிலத்திற்கே செல்கிறது. ஆண்டின் 12 மாதங்களும் இந்தத் தொழிலையே மேற்கொண்டு வருகிறோம்.

இதையும் படிங்க: “பொங்கல் படையலில் மிஸ் பண்ண முடியாத சிறுகிழங்கு”- விவசாயிகள் கூறும் தகவல்!

“அரசு கடன் வசதி அளிக்கவும்”: குடிசைத் தொழிலுக்கு ஒப்பான இந்தத் தொழிலுக்குத் தமிழக அரசும் கடன் வசதி அளித்து ஊக்கமளிக்க வேண்டும். நாங்களும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்பைச் சற்றுக் கூடுதல் விலை வைத்து வாங்கவும் ஏதுவாக இருக்கும். குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவது வரவேற்கத்தக்கது.

அதில் சீனிக்குப் பதிலாக வெல்லத்தை வழங்கினால் சிறப்பாக இருக்கும். வருகின்ற ஆண்டில் இதனைத் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். கரும்பு பிழிகின்ற எந்திரத்தில் அடுக்கப்பட்டு சக்கையாகப் பிழியப்படுகின்றன. அந்தச் சாறு அனைத்தும் சிறிய குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு, ராட்சத பாத்திரத்தில் காய்ச்சப்படுகின்றது. கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சப்படும் இந்தச் சாறு வெல்லம் பிடிக்கின்ற பக்குவம் வந்தவுடன், அருகிலுள்ள மரப்பலகையில் இட்டு பணியாளர்கள் கைப்பிடி அளவுள்ள சிறு, சிறு உருண்டைகளாகப் பிடித்து 'மலையாள உருண்டை'யாக அடுக்கப்படுகிறது. பிறகு அவற்றை மூட்டையில் கட்டி விற்பனைக்காகக் கொண்டு செல்கின்றனர்” என்றார்.

“சீனிக்குப் பதிலா வெல்லம் கொடுங்க”: இதையடுத்து பேசிய கொண்டையம்பட்டியைச் சேர்ந்த ஆலைப் பணியாளர் ஜெயா, “நாங்கள் இங்கு 15 ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறோம். ஆலை உரிமையாளர் எங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருகின்றனர். அதேபோன்று தமிழக அரசும் ஒத்துழைப்புத் தர வேண்டும். நியாயவிலைக் கடை கடைகளில் சீனி தருவதைத் தவிர்த்து வெல்லம், நாட்டுச்சர்க்கரையைத் தர வேண்டும். அப்போதுதான் எங்களுக்கான வாழ்வாதாரம் உத்தரவாதமாகும். இதுபோன்ற சிறு, குறு ஆலைகளுக்கு எந்தவித உதவியும் அரசுத் தரப்பில் இல்லை. இந்தத் தொழிலுக்குத் தேவையான சலுகைகளை அரசு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.

சிறு, குறு ஆலைகளுக்கு ஊக்கம்: கிருஷ்ணன் ஆலையிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 800 கிலோ உற்பத்தியாகிறது. கொண்டையப்பட்டியில் உள்ள மற்ற ஆலைகளிலிருந்து சராசரியாக 7லிருந்து 8 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தப் பகுதியின் பொருளாதாரம் மேம்படுவதுடன், உள்ளூர்ப் பெண்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புள்ள களமாகவும் உள்ளது. ஆகையால் அரசு சிறு, குறு ஆலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது இப்பகுதி ஆலைப் பணியாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.