ETV Bharat / state

'மழைநீர் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்க முடியலையா? அப்போ மருத்துவமனையை இழுத்து மூடுங்க' - ஐகோர்ட் காட்டம்!

எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்றும் அதற்கான முறையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 5:43 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இருப்பினும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல, கழிவுநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால், மருத்துவமனையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லை. வார்டுகளும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.

ஆகவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறையான கழிவு நீர் கால்வாய்களை அமைக்கவும், போதுமான கழிப்பறைகளை கட்டுவதோடு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போல வார்டுகளை தினமும் சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஒரு வருட குற்றப்பத்திரிக்கை ரிப்போர்ட்டில் முரண்; நீதித்துறை, காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு!

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "மருத்துவமனையில் கழிவுநீர் தேங்கி இருப்பது தொடர்பான புகைப்படம் சமர்ப்பிக்கப்பட்டது.

அரசு தரப்பில், "தற்போது மழை பெய்த நிலையில், அது தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் தேங்கி உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதற்கான முறையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.