ETV Bharat / state

முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் முன் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு! - Ponmanickavel Anticipatory bail - PONMANICKAVEL ANTICIPATORY BAIL

IG Ponmanickavel: சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரிய முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மனு மீது நாளை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் பொன்மாணிக்கவேல்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் பொன்மாணிக்கவேல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 9:58 PM IST

மதுரை: சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐயால் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், சிபிஐ காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில், அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல, சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பைக் குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டலத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார், இவருடைய பணிக்காலத்தில் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, அதற்கான முகாந்திரமும் இல்லை. எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனையடுத்து, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், “மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முன் ஜாமீன் வழங்கினால் வழக்கின் சாட்சியங்களைக் கலைக்க நேரிடும். எனவே. முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீது பதியபட்டுள்ள வழக்கு ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிரிவா அல்லது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவா என்பது குறித்து விளக்கம் தேவை. எனவே, அது சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: சுபாஷ் கபூருக்கு உதவிய ஐஜி பொன்மாணிக்கவேல்? சான்றுகளை சமர்ப்பித்த சிபிஐ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.