ETV Bharat / state

மாஞ்சோலை விவகாரம்; வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! - Manjolai estate case

Manjolai Estate Case: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில், மனுதாரர் தரப்பில் வனம் சம்பந்தமாக கோரிக்கை வைத்ததால், இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 7:16 PM IST

மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கிருஷ்ணசாமி தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "மாஞ்சோலை தொழிலாளர்கள் பிபிடிசி நிறுவனத்தால் அங்கு பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்களை பாரம்பரிய வனவாசிகளாக எவ்வாறு கருத முடியும்? தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைக்கான திட்டம் ஏதும் உள்ளதா?” என கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசுத் தரப்பில், “அது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. மீண்டும் கிருஷ்ணசாமி தரப்பில், “நீண்ட காலமாக வனத்தில் வசிப்பவர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருதலாம் என விதிகள் உள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்" என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கிருஷ்ணசாமி தரப்பில் வனம் சம்பந்தமாக கோரிக்கை வைத்ததால் இந்த வழக்கை
வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே இந்த நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால நிவாரணம் தொடரும் எனவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மாஞ்சோலை தொழிலாளர்களின் அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.