ETV Bharat / state

"சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்துக்கான தடைநீக்கம்".. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு! - MADURAI BENCH OF MADRAS HIGH COURT

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்துக்கான இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 9:41 PM IST

மதுரை: திருச்சி சேர்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனு,"காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி நீர் உள்ளது.

பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீரை எடுப்பது, மணல் அள்ளுவது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால் காவிரி ஆற்றை நம்பி உள்ள விவசாயப் பகுதிகளில் விவசாயம் குறைந்து விட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவகங்கை கூட்டுக் குடிநீர் எனும் திட்டத்தின் கீழ், காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியது.

நாள் ஒன்றுக்கு 86.5 மில்லியன் லிட்டர் நீர் இதற்கென காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் நிலையில், கரூர் மாவட்டம், மருதூர் பகுதியில் தடுப்பணையைக் கட்டுமாறு மனு அளித்தோம். தடுப்பணை கட்டிய பின்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கஸ்தூரி முன்ஜாமீன் கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு!

ஆனால் தற்போது சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஆனால் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கவில்லை. ஆகவே கரூர் மாவட்டம் உமையாள்புரம், மருதூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் அதுவரை சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்றம். சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த மனு என்று நீதிபதிகள் ரமேஷ் மற்றும் மரியா கிளாட் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் இடையிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில்,"நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கடந்த 2018 ல் சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கூட்டுக் குடிநீர் திட்டம் செய்ய மனு கொடுத்திருந்தேன்.

அந்த மனுவின் அடிப்படையில் தமிழக அரசு ரூபாய் 1873 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கி, தற்போது 90% பணி முடிந்து விட்டது. எனவே நீதிமன்றம் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,"பல கோடி ரூபாய் செலவழித்து மக்கள் நல திட்டம் செயல்படுத்தப் படுகிறது. எனவே, மனுதாரர் தடுப்பணை கட்டுவது குறித்து புதிதாக மனு அளித்து நிவாரணம் பெறலாம் என கூறி சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (Credit - ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.