ETV Bharat / state

பள்ளி ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு; தாளாளரின் முன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவு! - sexual harassment issue

Madurai Bench: மதுரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அப்பள்ளியின் தாளாளர், தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

File Image
கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:04 PM IST

மதுரை: மதுரையில், “ அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் 3 பெண் ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் சேத் டேனிராஜ் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார். தாளாளர் சேத் டேனியல்ராஜ், தன் அறைக்கு பெண் ஆசிரியர்களை தனித்தனியே வரச் சொல்லி, Teaching Aid காட்டச் சொல்வதும், அதில் பிழை இருந்தால் தாளாளர் சேத் டேனிராஜ் தன் மடியில் Chart-ஐ வைத்து பிழை திருத்துமாறும், Chart-கள் அனைத்தையும் தரையில் போட்டு ஒவ்வொன்றையும் குனிந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லுவது போன்ற தொடர் தொந்தரவு செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

மேலும், பள்ளி ஆசிரியர்கள் பெறும் மாதச் சம்பளத்தில் 8.5 சதவீதம் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கட்டயாப்படுத்தி வாங்கி, Society வாயிலாக கடன் பெற்று, அதை தாளாளராகிய தன்னிடம் தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறார்” என பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மூன்று பெண் ஆசிரியர்களும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே, அரசு உதவி பெறும் பள்ளியின் தாளாளர் சேத் டேனியல்ராஜ், தல்லாகுளம் போலீசார் பதிவு செய்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: ஆறு மாதங்களாக சிறுமிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்.. உறவினர்கள் உட்பட 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.