ETV Bharat / state

அனுமந்த பட்டா வழங்கியதில் முறைகேடு; மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - patta issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 6:56 PM IST

Bench Of Madurai High Court: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பட்டா வழங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரையைச் சேர்ந்த முத்துவேல் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 110 நபர்களுக்கு இலவச வீட்டு மனை அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட்டது. அரசு விதிகளுக்கு எதிராக தகுதியற்ற நபர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியைச் சேர்ந்த நடுக்காட்டான் என்பவருக்கும், அவரது மகன், அவரது மனைவி அவரது உறவினர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்களுக்கும் அரசின் இலவச வீட்டுமனை பட்டா வாங்கியுள்ளார். மேலும், ஒரே நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அதிகமானவர்களுக்கு முறைகேடாக இந்த அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

சகிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அண்டை கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடக் கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்கள், அரசின் இத்திட்டத்தில் பயன்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முறைகேடாக அனுமந்த பட்டாக்களை வழங்கி உள்ளனர். தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட அனுமந்த பட்டாவை ரத்து செய்து தகுதியுள்ள நபர்களுக்கு வழங்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, அரசின் இந்த திட்டத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடாக செயல்படுத்தி உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வாறு 4, 5 பட்டாக்கள் வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுபோன்று முறைகேடுகள் செய்தால் அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உரிய பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நாதகவுக்கு எதிராக 'புரட்சித் தமிழர்' கட்சி... சொத்துக்களை வாரி குவித்ததாக சீமான் மீது குற்றசாட்டு.. மாஜி நிர்வாகி ஆதங்கம்! - ntk seeman

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.