ETV Bharat / state

குத்துச்சண்டை போட்டி: சி.ஐ.எஸ்.சி.இ.-க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்! - CISCE Boxing Tournament Case - CISCE BOXING TOURNAMENT CASE

CISCE Boxing Tournament Case: சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து, 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது என சி.ஐ.எஸ்.சி.இ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 9:08 PM IST

சென்னை: இந்திய பள்ளி சான்றிதழ்கள் தேர்வு கவுன்சில் எனும் சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) எனும் பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில், 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: “உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்" - தீர்மானம் நிறைவேற்றிய திமுக மூத்த அமைச்சர்!

இந்த போட்டிகளில் 14 வயதுடைய 50 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டிக்கு, சென்னை அடையாறு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் அல்பெரிக் அபய் என்ற மாணவர் விண்ணப்பித்துள்ளார். செப்டம்பர் 13ஆம் தேதி ஜார்க்கண்டில் நடக்கும் இந்த குத்துச் சண்டை போட்டியில் 50 கிலோவுக்கு மேல் எடைப்பிரிவில் 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமான அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அல்பெரிக் அபய் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்தாண்டு 50 கிலோவுக்கு மேல் உள்ள மாணவிகள் பிரிவு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பிரிவை மட்டும் நீக்கியது பாரபட்சமானது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுசம்பந்தமான சி.ஐ.எஸ்.சி.இ-யின் அறிவிப்பை ரத்து செய்த நீதிபதி, ஜார்க்கண்டில் செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளில், 50 கிலோவுக்கு மேல் எடைப்பிரிவில் 14 வயது மாணவர்களையும் அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.