ETV Bharat / state

வெள்ளதுரை மேல்முறையீடு; மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து! - Assistant Commissioner velladurai - ASSISTANT COMMISSIONER VELLADURAI

Assistant Commissioner Velladurai: திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவல் நிலையத்தில் மரணமடைய காரணமாக இருந்ததாக, மதுரையில் உதவி ஆணையராக இருந்த வெள்ளதுரை உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Assistant Commissioner velladurai
Assistant Commissioner velladurai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 3:56 PM IST

சென்னை: விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் முனியாண்டியின் மகன் சுரேஷ் என்பவர், கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தை திருடியபோது பொதுமக்கள் துரத்தி அடித்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷின் நண்பர் டேவிட், பொதுமக்கள் பிடித்து, கரிமேடு காவல்துறையில் ஒப்படைத்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் தான் சுரேஷ் மரணம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சுரேஷ் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக உதவி ஆணையர் வெள்ளைதுரை, திலகர் திடல் ஆய்வாளர் விவேகானந்தன், கரிமேடு உதவி ஆய்வாளர் சீனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுரேஷின் தந்தை முனியாண்டி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த ஆணையம், காவல் துறை தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, முனியாண்டி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அந்த தொகையை அப்போது உதவி ஆணையராக இருந்த வெள்ளதுரை, ஆய்வாளராக இருந்த விவேகானந்தன் ஆகியோரிடமிருந்து தலா 2 லட்சத்து 50 ஆயிரத்தை வசூலிக்க வேண்டுமெனவும், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு, மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உதவி ஆணையர் வெள்ளதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வு, பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே சுரேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த காயம் பொதுமக்கள் தாக்கியதாலேயே ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். சுரேஷின் மரணத்திற்கு வெள்ளதுரை தான் காரணம் என எந்த புகாரும் இல்லை எனக் கூறி, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "ஆம்பூரில் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் உள்ளது"- அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன? - DURAI MURUGAN ELECTION CAMPAIGN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.