ETV Bharat / state

பிசாசு 2 படத்திற்கு இடைக்கால தடை.. காரணம் என்ன?

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா (Credits - Andrea 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 9:40 PM IST

சென்னை: ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில், “பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4 கோடியே 85 லட்சம் ரூபாயில் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது.

இந்தத் தொகையை திருப்பிக் கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது.

அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி ஆக 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து வழங்க ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி பணத்தைச் செலுத்தாமல் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், அந்தப் படத்தை வெளியிட தயாராக உள்ளது. எனவே, அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: "தங்கலான் ஓ.டி.டி ரிலீஸுக்கு தடையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலும், அந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை, பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு நவம்பர் 18ஆம்
தேதிக்குள் பதிலளிக்கும் படி ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.