ETV Bharat / state

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Financial Institution scam chennai

Hijau Financial Institution scam: சென்னையில் ஹிஜாவு நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் தொடுத்த ஜாமீன் மனுவானது, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 3:43 PM IST

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு என்னும் நிதி நிறுவனத்தில், 15 சதவிகிதம் வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து, பொதுமக்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தொடுத்த ஜாமீன் மனுவானது, இன்று (பிப்.07) சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாவு எனும் நிதி நிறுவனம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 15 சதவிகிதம் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்து பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில், நிறுவன இயக்குனர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகளான கோவிந்தராஜ், சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் யாரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக இல்லை எனவும், இந்த முறைகேடுகளுக்கும், மனுதாரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருப்பதால், ரெட் நோட்டீஸ் அளித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மனுதாரர்கள் மூவரும் சேர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும், விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், பலர் ஏமாற்றப்பட்டுள்ளதால் மூவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதி மூவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இது போன்ற நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: லிவ்-இன்; திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கு கிடுக்குப்பிடி.. பொது சிவில் சட்ட மசோதா கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.