ETV Bharat / state

"சவுக்கு சங்கருக்கு சிறைக்கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம்" - தமிழ்நாடு அரசு வாதம்! - savukku shankar Case - SAVUKKU SHANKAR CASE

Savukku Shankar Prison transfer Case: கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court file photo
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 1:50 PM IST

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். அதனை அடுத்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியதாகவும், புகாரளித்து அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அதேபோல, காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கவே நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை இன்று (மே 9) தாக்கல் செய்யும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுவானது இன்று (மே 9) மீண்டும் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிறையில் சவுக்கு சங்கர் கொடுமைப்படுத்தப்படவில்லை. அவருக்கு ஏற்கனவே சிறைக் கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம். அதனால் தாக்கப்பட்டிருந்தால், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்?” என பதிலளித்தார்.

மேலும் தொடர்ச்சியாக வாதாடிய அவர், சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் மருத்துவர்கள் அறிக்கையின் அடிப்படையில், சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறைத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "மக்கள் பயன்படுத்தும் நீர்த்தொட்டி பராமரிப்பில் அலட்சியமா?" - மாட்டுச்சாணம் கலந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.