சென்னை: சென்னை செனடாஃப் ரோடு (cenotaph) இரண்டாவது வீதியில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள தனது பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, நடிகை த்ரிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை த்ரிஷா மற்றும் அவரது எதிர் தரப்பான மெய்யப்பன் சார்பிலும் பிரச்னை சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நடிகர் சூர்யா படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி? விஜய்க்கு சொன்ன கதையா? - RJ balaji Suriya Combo
இதனையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, நடிகை த்ரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மதில் சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை த்ரிஷா தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.