ETV Bharat / state

“உத்தரவில் திருப்தி இல்லையென்றால் மீண்டும் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது” - ஜாபர் சேட் வழக்கில் ஐகோர்ட்! - Jaffer Sait case against ED

Jaffer Sait: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 3:05 PM IST

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2011ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆனால், இதே புகார் தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை கடந்த 2020ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு, வழக்கை ரத்து செய்வதாக முதலில் நீதிமன்ற அறையில் அறிவித்தது. பின்னர், சில விளக்கங்கள் வேண்டும் என வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் (செப்.3) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.

அப்போது, ஜாபர் சேட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், “இறுதி உத்தரவு பிறப்பித்த பின்பு மீண்டும் விசாரிக்க முடியாது. உத்தரவின் நகலில் கையெழுத்து போட்டாலும், போடாவிட்டாலும் மீண்டும் விசாரிக்க முடியாது. அப்படி விசாரிக்க வேண்டும் என்றால், இருதரப்பிற்கும் மீண்டும் விசாரிப்பதாக நோட்டீஸ் கொடுத்த பின்பே விசாரிக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் உத்தரவை, மனுதாரர் உட்பட அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிருந்தனர். ரத்து செய்வதாக அறிவித்த பின்பு மீண்டும் விசாரிப்பதனால் வழக்கு தொடர்ந்தவரின் நிலை என்ன? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை என்னவாகும்? மேலும், பொறுப்பு தலைமை நீதிபதியிடம் இந்த அமர்வு விசாரிக்கக்கூடாது.

வேறு அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இணையதள பதிவுகளில் உத்தரவு விவரம் நீக்கப்பட்டு தில்லு முல்லு நடந்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இந்த வழக்கை இதே அமர்வு விசாரிக்கக் கூடாது. நீங்கள் எதையோ மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் விசாரிக்கிறீர்கள். எனவே, விசாரிக்கக் கூடாது” என நீதிபதிகளிடம் கடுமையாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒரு உத்தரவை திரும்பப் பெறுவதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லையா?” என கேள்வி எழுப்பினர். மேலும், “வழக்கு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்ட உத்தரவில் நாங்கள் கையெழுத்திடவில்லை. உத்தரவில் திருப்தி இல்லை என்றால், அந்த வழக்கை தன்னிச்சையாக மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறானது. தொழில்நுட்பக் காரணங்களுக்காகவே ஜாபர் சேட் மீதான மூல வழக்கு ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை” என வாதிட்டார்.

இதனையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு.. ஜாபர் சேட் வழக்கில் திடீர் ட்விஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.