ETV Bharat / state

உதயநிதிக்கு எதிரான 'ஏஞ்சல்' பட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு! - CASE AGAINST UDHAYANIDHI STALIN

ஏஞ்சல் பட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 4:10 PM IST

சென்னை: ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. 80 சதவீத படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது.

மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை முடிக்க வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், 2023ம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படமே தனது கடைசி படம் என உதயநிதி தெரிவித்தார். எனவே ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து தர உத்தரவிட வேண்டும். மேலும் 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்" கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு!

இந்த வழக்கை நிராகரிக்க கோரி தற்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "படத்தை முடித்து கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படாது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.