ETV Bharat / state

ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு அனுமதி வழங்குவதில் அரசின் நோக்கம் என்ன? - நீதிபதி கேள்வி! - rss procession - RSS PROCESSION

உயர்நீதிமன்ற விதிகளின்படி கூடுதல் விவரங்களை அளித்தால் ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 6:48 PM IST

சென்னை : அக்டோபர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளுக்குட்பட்டு தான் அனுமதி கேட்பதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

மாநிலம் முழுவதும் ஒரே காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது பிரச்னை ஏற்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க : பாலியல் தொல்லை வழக்கு: 7 வயது சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தனர். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதி கோரும் பல இடங்களில் அணி வகுப்புக்கான மாற்று தேதி மற்றும் மாற்று வழித்தடம் குறிப்பிடப்படவில்லை எனவும், எவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள்? தொடங்கும் இடம், முடியும் இடம் குறிப்பிடப்படவில்லை என கூறினார்.

மேலும், யார் தலைமையில் ஊர்வலம் நடைபெறுகிறது என்ற தகவல்களும் வழங்கப்படவில்லை என கூறினார். உயர் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் படி, கூடுதல் விவரங்களை அளிக்கும் பட்சத்தில் அணிவகுப்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு அனுமதி வழங்குவதில் அரசின் நோக்கம் என்ன? எனவும், காவல்துறை கேட்கும் விவரங்களை அளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.