ETV Bharat / state

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு; அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சிறை தண்டனை குறைப்பு! - rp paramasivam case

ex aiadmk mla rp paramasivam case: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 2:15 PM IST

சென்னை: கடந்த 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.பி.பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 1998 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

பரமசிவம் மற்றும் அவரது மனைவி பூங்கொடிக்கு எதிரான இந்த வழக்கை விழுப்புரம் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, கடந்த 2017 ஆம் ஆண்டு பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அவரது பெயர், வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.

பரமசிவத்துக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பரமசிவம் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பெயரிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம் எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை கணக்கிடும் போது, 26 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளதாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாகவும் பின்னர், வழக்கறிஞரின் வேண்டுதலுக்கு பின் ஓராண்டாகவும் குறைத்து தீர்ப்பளித்தார்.

மேலும், அபராதத் தொகையை 33 லட்சம் ரூபாயில் இருந்து 26 லட்சம் ரூபாயாக குறைத்த நீதிபதி, சொத்துக்கள் முடக்கம் செய்யும்படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அத்துடன், கூடுதலாக செலுத்தப்பட்ட அபராதத் தொகையை திருப்பி வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே அனுபவித்த தண்டனை காலத்தையும் கழித்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை கல்லூரி மாணவி மர்ம மரணம்.. காதலன் வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.